
குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரில் தொடர்ச்சியாகக் குளித்து வந்தால், சருமம் மென்மையாகும்.
கைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.
சாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும்.
அல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் தலை அரிப்பு சரியாகும். சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்து, சருமம் மின்ன ஆரம்பிக்கும்.
செம்பருத்திப் பூக்களை அரைத்து தலைக்கு ஷாம்பூவாகப் பயன்படுத்தினால், தலைமுடி மின்னும்.
ஃபிரெஷ்ஷான தாமரையை விழுதாக அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கங்கள் வருவது தள்ளிப்போகும்.
சூடான பாலில் பவழமல்லிப் பூக்களைப் போட்டு, ஆறியதும் அந்தப் பாலால் முகம் கழுவினால் முகம் மென்மையாகும்.