சாக்லேட் வைத்து வித்தியாசமாக இந்த டிபன் செய்து பாருங்க..!

Share

இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று . ஆனால் சாக்லேட் தினமான இன்று சாக்லெட்டை வைத்து சுவையான தோசை சுடும் ஐடியாவை உங்களுக்கு தருகிறோம்.

சாக்லெட்டை வைத்து கேக், பிஸ்கட் ,பிரட் ரோல் போன்றவை செய்து பார்த்திருப்போம். சாக்லேட்டை வைத்து தோசை செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படலாம். புதிய மற்றும் சிறப்பான சுவை கொண்ட தோசையை சுவைக்க விரும்பினால், கண்டிப்பாக சாக்லேட் தோசையை நிச்சயம் முயற்சிக்கலாம்.

காலை உணவு, அல்லது இரவு உணவிற்கு இது சரியான உணவாக இருக்கும். எளிமையாக செய்துவிடலாம். அதோடு நிச்சயமாக குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். நீங்கள் ஒரு சாக்லேட் பிரியர் என்றால், இந்த செய்முறையை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். சரி இந்த தோசைக்கான செயல்முறையை இப்பொது உங்களுக்கு சொல்கிறோம்.

சாக்லேட் தோசைக்குத் தேவையான பொருட்கள்- 6 தோசைகளுக்கானது:

1 1/2 கப் தோசை மாவு

3 தேக்கரண்டி சாக்லேட் சிரப்

4 தேக்கரண்டி நறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள்/ பாதாம்/ முந்திரி

8 தேக்கரண்டி நுட்டெல்லா

1 தேக்கரண்டி வெண்ணெய்

செய்முறை:

மாவை முதலில் தயார் செய்யவேண்டும். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில், சாக்லேட் சிரப், நுட்டெல்லா மற்றும் நறுக்கிய வால்நட்ஸை ஒன்றாக கலந்து தனியாக எடுத்துக்கொள்ளவும். சாக்லேட் சிரப் இல்லை என்றால் சாக்லேட்டை உடைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு அதை வெந்நீரில் மிதக்க வைத்து உருக்கி அதை மாவுடன் கலந்துகொள்ளலாம்.

5 நிமிடம் கழித்து வெண்ணை அல்லது நெய் உருகி எடுத்து வைத்துக்கொண்டு சாதாரண தோசை போலவே கல்லில் ஊற்றவும். தோசைமாவில் குமிழ்கள் தோன்றுவதை நிறுத்தும் வரை சமைக்கவும்.பின்னர் அந்த  தோசையைப் புரட்டி சமைக்கவும். மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் மிதமான சூட்டில் இன்னும் கொஞ்சம் நேரம் வேகா விடவும்.

இதையும் பாருங்க: குழந்தைகளுக்கு ஏற்ற மென்று தின்னும் சுவையான சக்கரை குக்கீ ரெசிபி இதோ!

இது லேசாக சாக்லேட்டின் கசப்பு சுவையுடன் இருக்கும். எனக்கு இனிப்பு சுவை மட்டும் தான் வேண்டும் என்றால் சாதாரண தோசை சுட்டு சூடு ஆறும் முன்னர் அதன் மேல் உருக்கிய சாக்லேட்டை பரப்பி சுருட்டி பரிமாறலாம்.அவ்வளவு தான் சாக்லேட் தோசை ரெடி.இதை வெறுமனே அப்படியே சாப்பிடலாம் அல்லது இனிப்பு சாஸ் கொண்டும் தொட்டு சாப்பிடலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com