தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட் – 135 கிராம்
வெண்ணெய் – 95 கிராம்
ஐஸ்ஸிங் சுகர் – 100 கிராம்
முட்டை – 2
மைதா – 35 கிராம்
செய்முறை:
மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ளவும். மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் மைதா சேர்த்து நன்கு மெதுவாக கலந்து கொள்ளவும். மைதா கட்டியாக இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும். இதனை 5-7 நிமிடங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும். க்ரீஸ் செய்யப்பட்ட ரேம்கினில் இந்த கலவையை ஊற்றவும். 9-10 நிமிடங்கள் வரை இந்த பேக் செய்யவும். வென்னிலா ஐஸ் க்ரீம் அல்லது பழங்களுடன் சேர்த்து இந்த சாக்லேட் லாவா கேக்கை பரிமாறவும்.