சாக்லேட் பிரியர்களே உஷார்! இந்த 6 வகை சாக்லேட்டுகள் ஆபத்தானவை… திரும்பப் பெறும் Cadbury! | Cadbury Chocolate Desserts Recalled Across UK Over Listeria Fears

Share

தொற்றினைப் பரப்பும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Cadbury, தனது ஆறு வகை சாக்லேட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

சாக்லேட்டுகளை விரும்பாதவர்கள்தான் யார்? பல் சொத்தையாவது போன்ற ரிஸ்க் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானவை சாக்லேட்டுகள். அதிலும் குறிப்பாக கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளுக்கு அனைவரிடமும் தனி மவுசு உள்ளது.

கேட்பரி சாக்லேட் | மாதிரிப்படம்

கேட்பரி சாக்லேட் | மாதிரிப்படம்

ஆனால் சமீப காலமாக இந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. காலாவதியாகும் தேதிக்கு முன்னரே சாக்லேட்டில் புழு இருப்பது, சாக்லேட் கெட்டுப்போவது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது.

அந்த வகையில், தற்போது இங்கிலாந்தில் கேட்பரி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆறு வகையான சாக்லேட்டுகளில், லிஸ்டரியோ எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, Cadbury டெய்ம் (Daim), கிரன்ச்சி (Crunchie), ஃப்ளேக் (Flake), பட்டன்ஸ் (Buttons),டெய்ரி மில்க் சங்க்ஸ் (Chunks) மற்றும் ஹீரோஸ் ( Heroes) ஆகிய சாக்லேட் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com