சவுரவ் கோசல்.. துலிகா மான் அசத்தல்.. பதக்க வேட்டையில் இந்தியா /Commonwealth Games 2022 Historic Bronze Medals In Squash Silver In Judo – News18 Tamil

Share

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் துலிகா மான் களம் கண்டார். இவர், இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா அட்லிங்டன் உடன் மோதினார். ஆக்ரோஷமாக நடைபெற்ற இப்போட்டியில் துலிகா மான் தடுமாறினார். இதனால், சாரா வெற்றிபெற்று தங்கம் வென்றார். துலிகா மான் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதில் ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், ஆதிக்கம் செலுத்திய சவுரவ் 3-0 என நேர்செட்களில் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சவுரவ் கோசல் சொந்தக்காரரானார்ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் களம் கண்டார். வெற்றிக்காக கடும் போட்டி நிலவிய இப்போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ எடை தூக்கி பதக்க போட்டியில் லவ்பிரீத் நீடித்தார். மேலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ எடை தூக்கி அசத்தினார். இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 355 கிலோ எடை தூக்கி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் களம் கண்டார். வெற்றிக்காக கடும் போட்டி நிலவிய இப்போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ எடை தூக்கி பதக்க போட்டியில் லவ்பிரீத் நீடித்தார். மேலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ எடை தூக்கி அசத்தினார். இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 355 கிலோ எடை தூக்கி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

Also Read: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்

காமன்வெல்த்தில் குத்துச்சண்டை போட்டியை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினாலே வெண்கலப் பதக்கம் உறுதியாகும். எனவே, இரண்டு முறை இளையோர் உலகச் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நிது கங்காஸ், பர்மிங்ஹாம் காமன்வெல்த்தில் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், வேல்ஸ வீராங்க்னை ஹெலன் ஜோன்ஸை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். மகளிருக்காக ஹாக்கித் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குள் தடம் பதித்தது. லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா, தனது 4-வது போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இதில், 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனிடையே, ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, தனது 3-வது லீக் ஆட்டத்தில் கனடாவை சந்தித்தது. இதில்,கோல் மழை பொழிந்த இந்தியா 8-0 என வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com