மத்திய உள்துறை அமைச்சர் அரசின் சன்சாத் (Sansad TV) தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் மோடியுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. அடுத்தவர்களின் பேச்சை கவனிப்பதில் மோடியை போல் ஒரு நபரை பார்க்க முடியாது. எந்த பிரச்சனை குறித்த சந்திப்பாக இருந்தாலும், அவர் தேவையான அளவு மிகக் குறைவாகவே பேசுவார். அடுத்தவர்களை அதிகம் பேசவைத்து அமைதியாக கவனிப்பார்.
ஒரு நபரின் முக்கியத்துவத்தை விட அவரது எண்ணங்களின் முக்கியத்துவத்துக்கு நரேந்திர மோடி மதிப்பளிப்பார். அதன்பின்னர், முடிவெடுப்பார். எனவே, மோடி சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறினார்.
“மோடி அமைச்சரவையை மிகவும் ஜனநாயக முறையில் நடத்துகிறார். ஒரு மன்றத்தில் விவாதிக்கப்பட்டவை பொது களத்தில் கசிந்துவிட முடியாது, எனவே அவரே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்ற தவறான கருத்து உள்ளது; ஆனால் அது அவ்வாறு இல்லை. அவர் விஷயத்தைப் பற்றி விவாதிக்கிறார், அனைவரின் கருத்தையும் கேட்கிறார், நன்மை தீமைகளை மதிப்பீடு செய்கிறார். பிரதமர் என்பதால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவரிடமே உள்ளது” என்று அமித் ஷா கூறினார்.
இதையும் படிங்க: 100 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை நோக்கி இந்தியா!
அரசியலில் மாறுபட்ட கருத்துகளை உடையவர்கள் பிரதமரின் பிம்பத்தை தவறாக சித்தரிக்க முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.