லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 68 டெஸ்ட், 138 ஒரு நாள், 92 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜூனில் அவர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் 3,094 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 2,355, டி20 போட்டிகளில் 1,229 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2019-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022-ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயின் அலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்துள்ளார்.