சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாக பொன்னையன் வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோவுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்; பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு களங்கம் கற்பிக்கவே இது போன்ற ஆடியோ வெளியிடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார். நவீன தொழிநுட்பங்களை கொண்டு குரலை மாற்றி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். பன்னீர்செல்வம் தரப்பினர் தான் இதை செய்திருப்பார்கள் என குற்றம் சாட்டிய அவர்; பழனிசாமியின் செல்வாக்கை குறைக்க வேண்டும். அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆடியோ தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
பழனிசாமி தனக்கு தலைமை பதவி வேண்டும் என்று எங்கும் கேட்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களால் தான் கொடுக்கப்பட்டது. சி.வி.சண்முகம் மிகவும் திறமைசாலி என்பதால் மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டதாக பொன்னையன் கூறியுள்ளார். ஆடியோவில் பேசியது நான் அல்ல என பொன்னையன் மறுத்திருந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கன்னியாகுமரி நாஞ்சில் கோலப்பன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். என்னிடம் செல்போனில் பொன்னையன் பேசியது உண்மை தான்; மிமிக்ரி எல்லை செய்யவில்லை. பொன்னையனிடம் 9.7.2022 அன்று இரவு 5.59 மணி முதல் 17.28 நிமிடங்கள் பேசினேன் எவ்வாறு கூறினார்.