உணவில் சுவை என்பது சரியான உப்பு, காரம், புளிப்பை பொறுத்து அமைகிறது. இந்திய சமையலில் தவிர்க்க முடியாத மசாலா பொருள்களில் ஒன்று மிளகாய். ஆனால் இது இந்தியாவில் தோன்றியது அல்ல. வெறும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய சமையலறைக்குள் வந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் மக்களே.. மிளகாய் இந்தியா வந்த கதையை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியர்கள் முதலில் காரத்திற்கு மிளகைத்தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு கார சுவையைத் தருவதோடு உணவை கெடாமல் பாதுகாக்கும் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. மத்திய ஆசிய நாடுகள் வணிகத்திற்காக இந்தியா வந்தபோது இதை வாங்கிச்சென்றுள்ளனர். ஐரோப்பியர்கள் முன்னர் காரத்திற்கு ஒருவகை செடியின் இலைகளையும் விதைகளையும் பயன்படுத்தி வந்தனர்.
அப்போது அரேபியர்கள் இந்த மிளகை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக இன்றைய இத்தாலி பகுதியில் வாழ்ந்த வெனிசியர்கள் தங்கள் மசாலாப் பொருட்களை அரபு வணிகர்களிடமிருந்து பெற்றனர் . முன்னர் இந்தியாவில் இருந்து இஸ்தான்புல் வரை ஸ்பைஸ் சாலை ஒன்று இருந்துள்ளது. அதன் ஆயிரக்கணக்கான மைல்கள் வழியாக இந்திய மசாலாக்கள் ஐரோப்பிய நாடுகளை அடைந்தது.
இங்குதான் மத்திய ஆசிய நாடுகள் சந்தையின் கட்டுப்பாட்டைத் தொடங்கியது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே மசாலா வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை வெனிசியர்களும் அரேபியர்களும் கொண்டிருந்தனர். அவர்கள் இஸ்தான்புல்லில் மசாலா பொருட்களை வாங்கி பின்னர் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு விநியோகிப்பார்கள்.
இந்த தரைவழி பாதையை விட்டால், செங்கடலின் கரையோரத்தில் உள்ள துறைமுகங்களுக்கு மசாலாப் பொருட்களைக் கொண்டு செல் வேண்டும். பின்னர் அங்கிருந்து தரைவழியாக எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த நேரத்தில் அரேபியர்கள் வெனிசியர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வெனிசிய தலைமை விதித்தது. .
இந்த அரசியலால் இந்திய மசாலாப் பொருட்கள் அசல் விலையை விட பன்மடங்கு விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்பட்டது. இந்த மசாலாப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. ஆனால் அதற்கு நிர்ணயிக்கப்படும் விலையை தாங்க முடியாமல் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் மக்கள் இந்தியாவிற்கு நேரடியாக செல்ல முயன்றனர். ஆனால், தரைவழியும், சூயஸ் கால்வாய் வழியும் அரேபியர்களால் மூடப்பட்டது.

அதனால் இந்தியாவிற்கான மாற்றுப்பாதை தேடி புறப்பட்ட போது தான் அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. தக்காளி கதை நினைவிருந்தால் ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகல் ஆக்கிரமித்த இடங்களை பற்றி தெரிந்திருக்கும். அவை மத்திய மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை ஆக்கிரமித்த போது மத்தியில் தக்காளி கிடைத்தது போல மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மிளக்காயும் கிடைத்துள்ளது.
இந்தியாவைத் தேடி வந்த கொலம்பஸ் கரீபியன் தீவுகளுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கினார். அங்குதான் முதன்முறையாக மிளகாயை பார்த்தார். கருப்பு மிளகு தரும் அதே கார சுவையைத் தருவதால் இதையே மிளகிற்கு மாற்றாக பயன்படுத்தலோமே என்ற எண்ணத்தில் ஐரோப்பா எடுத்து சென்றுள்ளார்.
இதையும் பாருங்க : என்னது… தக்காளி நம்ம ஊர் காய்கறி இல்லையா..? தக்காளியின் உண்மை சரித்திரம் தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்பானியர்கள் மிளகாயை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை, பெரிதாக மதிக்கப்பட கூட இல்லை. ஆனால், போர்த்துகீசியர்கள் உடனடியாக அதை ஒரு மசாலாவாக அங்கீகரித்தனர். தங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் மிளகாய்க்கு தேவை இருக்கும் என்பதை உணர்ந்து அதன் விதைகளைக் கண்டறிந்தனர். விரைவில் அவற்றை தங்கள் நாடுகளிலும் அவர்களது மற்ற வெளிநாட்டு காலனிகளிலும் பயிரிடத் தொடங்கினர் . மற்ற நாடுகள் அதை சுவைத்து பார்க்கும் முன்பே அவர்கள் மிளகாயை விற்கத் தயாராகினர்.
அதன் பின்னர் 15 ஆம் நூற்றன்றில் இந்திய வந்த வாஸ்கோடகாமா என்ற போர்டுகேசியார் இங்கு உள்ள செழிப்பான வர்த்தக செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து இங்கு இருந்து மசாலாக்களையும் வாங்கி நாடு திரும்பினார். அடுத்தடுத்து வந்த போர்த்துகீசிய வர்த்தகர்கள் இந்திய பகுதிகளின் வர்த்தகத்தைத் தொடங்கி காலணிகளை உருவாக்கினார்.

அப்போது காலனி தலைநகர் கோவா கோட்டைக்கு அருகில் இருந்த தரிசு நிலத்தில் மிளகாயை பயிரிட்டு அதை இந்தியர்களுக்கு மிளகிற்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளனர். கொஞ்சம் ஆண்டுகள் ஆனதும் இந்திய மக்கள் அதை தங்கள் மசாலா பெட்டிக்குள் சேர்க்க தயாராகிவிட்டனர். தக்காளியை போலவே இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய உணவில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய மசாலாவாக மிளகு மருந்து, மருத்துவம் தவிர்த்து ஒரு சில உணவுகளுக்கு மட்டும் பயன்படுத்த படுவதாக மாறியது.
போர்த்துகீசிய காலனிகளான தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது. இப்போது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய மசாலாவாக மிளகாய் தான் இருந்து வருகிறது, மிளகாய் இனத்தில் ஆயிரக்கணக்காக வகைகள் உணவில் பயன்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் மிளகாய் வெளிநாட்டில் உருவாக்கி இந்திய வந்த மசாலா பொருள்…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.