சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ – நாளை மாபெரும் இறுதிப்போட்டி! | samayal super star season 2 final will be held in chennai

Share

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 16) நடைபெறவுள்ளது.

சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் போட்டி களைகட்டியது. தொலைகாட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் தொடங்கிய சீசன் – 2 போட்டிகள் தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், காரைக்குடி,விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது. வெவ்வேறு ஊர்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் இரண்டு கட்டங்களாக போட்டி நடைபெற்றது. கடும் போட்டியாளர்களுக்கு மத்தியில் மொத்தம் 46 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகினர்.

பாஸ்ட் ஃபுட் கலாசாரம் அதிகரித்து வரும் காலத்தில் வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும், வெரைட்டியாகவும் சமைக்கலாம் எனப் போட்டியாளர்கள், பார்வையாளர்கள், வாசகர்கள் என அனைவரது மனதிலும் ஆழமாக பதிய வைத்த சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட்ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com