சென்னை: சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு உறுதியேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற கலைஞரின் புதல்வர் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நான் கடிதம் எழுதியதுடன், தொலைபேசியிலும் பேசினேன். நமக்கான இட ஒதுக்கீட்டை விரைவில் வென்றெடுப்போம். வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க நாம் சாதிக்க வேண்டியவை ஏராளம். அவை அனைத்தையும் ஒன்றுபட்டு வென்றெடுக்க உறுதியேற்போம்.
சமூகநீதியை வெல்ல ஒன்றுபட்டு உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
Share
