சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த சித்திரைவேல், புதுவை மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த ராமச்சந்திரன், புதுவை மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த செந்தில் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநில, மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் தங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: சரத்குமார் அறிவிப்பு
Share