`சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல’ – காட்டமான முதல்வர்; அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்

Share

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன், கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து, சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர், `சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல’ என்றார். அதனை தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்றைய அவை நடவடிக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என ஒரு நாள் சஸ்பெண்ட்-யும் அளித்தார்.

சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் சம்பந்தமாக முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசினார். அவர் கூறியதாவது…

‘இந்த அவைக்கும், அவை மூலம் மக்களுக்கு சொல்ல விரும்புவது, “தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது. இங்கு பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அதனால் தான், முதலீடுகள் உள்ளிட்ட முன்னேற்ற பாதையில் செல்கிறது தமிழ்நாடு.

இதை தாங்கி கொள்ள மாநில விரோத சக்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழும் குற்றங்களை பெரிதாக்குகின்றன. போலீஸாரை இழிவுபடுத்துகின்றன.

'அதிமுக தூபம் போடுகின்றது' - ஸ்டாலின்
‘அதிமுக தூபம் போடுகின்றது’ – ஸ்டாலின்

தூபம் போடுகின்றது!

இதற்கு பிரதான எதிர்க்கட்சி துணை போகின்றது… தூபம் போடுகின்றது. இது வேதனையளிக்கிறது.

அதிமுக ஆட்சியின் கலவரம் போல் இந்த ஆட்சியில் இல்லை. இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளது. ஆளுங்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என்று பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com