சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி வேலை: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Share

திருவாரூர்: திருவாரூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது ஏற்புடையதல்ல. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பரப்பலாம். ஆளுநராக இருந்து கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டின் வரலாறு தெரியாமலும் ஆளுநர் பேசுவது கண்டிக்கத்தக்கது. கன்னியாகுமரியில் நடந்த தேரோட்டத்தில் தமிழக அமைச்சர்களை தேரை இழுக்க விடாமல் தடுக்க முயன்றது பாஜகவின் சதி செயல் ஆகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி வேலை செய்கிறது. குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எதிர்க் கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயலும் சமயத்தில் மம்தா பானர்ஜி செய்யும் செயல் பாஜகவிற்கு உதவுவதாக அமைகிறது.மோடி என்ற ஒற்றை உருவத்தை வைத்து தான் பாஜக அரசியல் செய்கிறது. அக்கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளியில் வரும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com