பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை ஹனியை காவலில் எடுத்த விசாரணை நிறுவனம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் ஹனி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஷஹீத் பகத் சிங் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் முதலமைச்சர் சரண்ஜித் சின் சன்னி மருமகன் பூபேந்தர சிங் ஹனி தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கதுறை, ரூ 8 கோடியை கைப்பற்றினர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனா். இதில் பூபேந்தர சிங் இடங்களும் அடக்கம். இந்த சோதனையை தொடர்ந்து பூபேந்தர சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது.
இதையும் படிங்க: பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை
113 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் முதலமைச்சரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜித் சிங் சன்னி, மேற்கு வங்க தேர்தலின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தற்போது, அதேமுறையை பஞ்சாப்பில் பின்பற்றுகின்றனர்.
மேலும் படிக்க: புஷ்பா பட ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்
இதன்மூலம் எனக்கும், அமைச்சர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்கள், நாங்கள் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.