சஜித் அக்ரம், நவீத் அக்ரம்: ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தந்தை – மகன் யார்?

Share

சிட்னி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை, மகன் செய்தது என்ன?
படக்குறிப்பு, நவீத் அக்ரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர்களை தந்தை மற்றும் மகன் என்று விவரித்துள்ளன.

தந்தையின் பெயர் சஜித் அக்ரம், அவருக்கு 50 வயது. மகனின் பெயர் நவீத் அக்ரம், அவருக்கு 24 வயது.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை போன்டை கடற்கரையில், யூத ஹனுக்கா பண்டிகைக்காக கூடியவர்கள் மீது இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த இரண்டு பேர் தனிப்பட்ட முறையிலேயே செயல்பட்டார்கள் என்றும் அவர்கள் எந்தப் பெரிய பயங்கரவாத குழுவின் பகுதியாகவும் இல்லை என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்தார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com