சங்கக்காரா ‘நறுக்’ – News18 Tamil

Share

அஸ்வின் டெஸ்ட், டி20, ஒருநாள் என்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் அவர் இன்னும் மேம்படுவது பற்றி சிந்திக்க வேண்டும், மரபான ஆஃப் ஸ்பின் டெலிவரிகளுக்கு அவர் திரும்ப வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

அதாவது அஸ்வினின் 6 பந்துகளில் 3 பந்துகள் பரிசோதனை முயற்சி வீச்சாக இருக்கிறது, இதில் அவர் விக்கெட்டுகளை எடுக்க முடியாது. மரபான ஆஃப் ஸ்பின்னில் லெந்த்தை மாற்றி வேகத்தை மாற்றி டெலிவரி செய்யும் பாயிண்ட்களை மாற்றி பிளைட்டை மாற்றி செய்யும் வித்தைகளில்தான் பேட்டர்களை வீழ்த்த முடியும், அதாவது ஒர்க் அவுட் செய்து வீழ்த்த முடியும். ஆனால் அஸ்வின் அடிக்கடி கேரம் பந்துகளை வீசுகிறார் ஆனால் அது டர்னும் ஆவதில்லை ஒன்றுமாவதில்லை, நேர் நேர் தேமாவாகச் செல்கிறது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ஓரளவுக்கு நன்றாக செயல்பட்ட அஸ்வின் பற்றி சங்கக்காரா கூறும்போது, “அஸ்வின் எங்களுக்காக பெரிய் விஷயங்களைச் செய்துள்ளார். அவர் சாதனையாளர், லெஜண்ட் இருந்தாலும் அவரது பந்துவீச்சும் மேம்பட வேண்டியத் தேவை உள்ளது. குறிப்பாக ஆஃப் ஸ்பின் பந்துகளை அதிகம் வீச வேண்டும் பரிசோதனை பந்துகளை திடீரென வீசினால் பலன் இருக்கும்.

130 ரன்கள் போதவே போதாது, முதலில் அவர்களை பேட் செய்ய வைக்கலாம் என்றும் நினைத்தோம். ஆனால் பிட்ச் வறண்டு கிடந்ததால் போகப்போக ஸ்பின் எடுக்கலாம் என்று நினைத்தோம். 160-165 இருந்திருந்தால் போதும். 70/1 என்று நன்றாகவே இருந்தோம். சஞ்சு ஆட்டமிழந்தவுடன் குஜராத் அருமையாக வீசி ஆட்டத்தை தங்கள் வசமாக்கியது. ஷுப்மன் கில்லை முதல் ஓவரில் எடுக்காதது துரதிர்ஷ்டம். அவர்கள் கூட்டணி அமைத்தார்கள் நாங்கள் அதை செய்யவில்லை.

ஒட்டுமொத்தமாக மேம்பாடு தேவைப்படுகிறது. அடுத்த சீசனில் ரியான் பராக்கை மிடில் ஆர்டரில் இறக்கி விடப்போகிறோம் அவர் திறமையான வீரர் அவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவர் வேகம் மற்றும் ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக ஆடுபவர்” என்றார் சங்கக்காரா.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com