சக்கர நாற்காலி கழிவறை: தமிழ்நாட்டு பெண் உருவாக்கிய மாடல் தரும் சிறப்பு வசதி, கிடைத்த முதலீடு

Share

ஷ்ருதிபாபு

பட மூலாதாரம், Shruti Babu

”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர்.

ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமாகவே இயங்கிகொள்ள நான் உருவாக்கியுள்ள பிரத்யேக சக்கர நாற்காலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் ஷ்ருதி பாபு.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க பெண்ணான ஷ்ருதி, 2016ஆம் ஆண்டு கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பொறியியல் (Biomedical Instrumentation engineering) படிப்பை முடித்தார். படிப்பை முடித்த பிறகு தொழில் முனைவோராக விளங்க வேண்டும் என்ற அவரின் கனவு இன்று நனவாகியிருக்கிறது.

கழிப்பறை வசதியுடன் சக்கர நாற்காலி

“படிப்பை முடித்த பிறகு உடனடியாக எந்த வாய்ப்பும் அமையவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். ஆனாலும் மனதிற்குள் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவு மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே வேலை முடிந்து வந்தவுடன் அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்துவந்தேன். அப்போதுதான் மத்திய அரசின் BIRAC ஏஜென்ஸியுடைய ஃபெல்லோஷிப் (fellowship) கிடைத்தது. எனது லட்சியத்தை அடைவதற்கு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள முடிவு செய்தேன்” என்று பிபிசியிடம் கூறினார் ஷ்ருதிபாபு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com