கோவை கொலை: சந்தேக நபர்களை சுட்டுப்பிடித்த போலீஸ் – என்ன நடந்தது?

Share

கோவை கொலை பிபிசி
படக்குறிப்பு,

பாலகிருஷ்ணன், கோவை மாநாகர காவல் ஆணையர்

கோவை மாநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட சந்தேக நபர்களில் இருவர் தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவர்களை சுட்டிப் பிடித்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோகுல் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியைக் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மனோஜும் கத்திக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் கோகுல் கொலை வழக்கை விசாரித்த தனிப்படையினர் இதுவரை ஜோஸ்வா, கௌதம், ஹரி, பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா, டேனியல் ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

அதில் இருவர் யூசுப் என்கிற உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் காவல்துறையினர் அவர்களை சுட்டுப் பிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com