கோவை: ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ – சிறைவாசிக்கு குவியும் பாராட்டு

Share

ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ

பட மூலாதாரம், PRISON DEPARTMENT

படக்குறிப்பு, சோலார் ஆட்டோ இடைவிடாமல் 200 கி.மீ. வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசி ஒருவர் தயாரித்துள்ள சோலார் ஆட்டோ பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவை மத்திய சிறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறிய தகவலின்படி, கோவை சிறையில் தற்போது 2420 சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 1000 பேர் தண்டனை சிறைவாசிகள்; 150 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மற்றவர்கள் விசாரணைக் கைதிகள் உள்ளிட்டோர். இந்த கைதிகளில் 500க்கும் மேற்பட்டோர், பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களாக உள்ளனர்.

”கோவை மத்திய சிறையில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், எம்பிஏ படித்த சிறைவாசிகள் பலரும் இருக்கின்றனர். ஆயுள்கைதியாக இங்கிருக்கும் யுக ஆதித்தன் என்ற 32 வயது நபர், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர்.

அவர்தான் தற்போது சோலார் ஆட்டோ ஒன்றைத் தயாரித்துள்ளார். அது சிறப்பாகச் செயல்படுகிறது. டிஜிபி உள்ளிட்ட பலரும் அதைப் பாராட்டியுள்ளனர்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com