தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்தில் பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ், கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பாஜக ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.