சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 76-வது உலக சுகாதார சபையில், தனது அறிக்கையை சமர்பித்தார் WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.
அதன்பின் பேசிய அவர், “கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர், கோவிட் தொற்று இனி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அந்தப் பெருந்தொற்று இன்னும் முற்றிலுமாக மறையவில்லை. நம்மைவிட்டு தூரமாக இருக்கிறது அவ்வளவுதான்.
கோவிட் தொற்றைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆபத்தான புதிய பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளது. புதிய பெருந்தொற்று கொரோனாவைவிட அதிகளவிலான உடல்நல பாதிப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால் அதை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.
கோவிட் தொற்று பரவியபோது எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் உலகம் அதை எதிர்க்கொள்ளத் தடுமாறியது. அதனால் உலகம் முழுவதும் பல சுகாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது.