கோவிட் தொற்றுக்கு பின், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கட்டுப்பாடுகளை மீறும் சீன இளைஞர்கள்!|Youngsters in china disobeys with the covid rules

Share

எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். 

இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஏழைகளால் வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. 

இந்நிலையில், இளைஞர்கள் தவறான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருவது, நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது.     

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com