கோவா இரவு விடுதியில் தீ விபத்து – நள்ளிரவில் நடந்தது என்ன?

Share

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், SCREENGRAB

கோவாவில் சனிக்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள அந்த இரவு விடுதியில் இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப்பின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது.

விபத்தில் 25 பேர் இறந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இரவு விடுதியின் சமையலறை ஊழியர்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் பெண்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது?

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், ANI

கோவா டிஜிபி அலோக் குமார் கூறுகையில், “அர்போராவில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 12.04 மணிக்கு தீ விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு படையினரும் ஆம்புலன்ஸ்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com