இதுகுறித்து பேசிய கபில் தேவ், “தனிப்பட்ட வீரரைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசிக்க வேண்டும். கோலி, ரோஹித் போன்ற 2 – 3 வீரர்கள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைத்தால் அது ஒரு போதும் நடக்கவே நடக்காது. கோப்பையை வெல்லும் அளவிற்கான இளம் வீரர்களும், வெற்றியாளர்களும் நம்மிடம் உள்ளனர்.

2 – 3 வீரர்கள் அணியின் தூண்களாக இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனையெல்லாம் உடைத்துவிட்டு, 5 – 6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னுக்குக் கொண்டு வருவதுதான் சரியான முடிவு. அதனை அணியின் நலனுக்காக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சில கடினமான முடிவுகளை எடுத்துத்தான் தீர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.