மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளாசப்பட்டது, இவருடன், தொடக்க வீரர் டாம் அல்சாப் தனிப்பட்ட ஸ்கோராக 189 ரன்களை விளாச சசெக்ஸ் அணி 400 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா குறைந்தது 100 இன்னிங்ஸ்களை ஆடியவர்களில் கோலி மற்றும் பாபர் அசாமைக் கடந்து 109 இன்னிங்ஸ்களில் 57.48 என்ற சராசரியை வைத்துள்ளார்.
Also Read: ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் எல்லோரும் வாயை மூடிக்கொள்வார்கள் – கோலிக்கு கொடிபிடிக்கும் ரவி சாஸ்திரி
மைக்கேல் பெவன் 385 இன்னிங்ஸ்களில்தான் 57.86 என்ற சராசரியை லிஸ்ட் ஏவில் வைத்துள்ளார். பாபர் அசாம் 56.56, கோலி 56.60 என்ற சராசரியை வைத்துள்ளனர். இந்த இன்னிங்ஸ் மூலம் புஜாரா 8 இன்னிங்ஸ்களில் 614 ரன்களை எடுத்துள்ளார். இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த 2வது வீரர் ஆனார். லிஸ்ட் ஏ மட்டுமல்லாது இந்த கவுண்ட்டி சீசனில் சிகப்புப் பந்து கிரிக்கெட்டிலும் புஜாரா 13 இன்னிங்ஸ்களில் 1094 ரன்களுடன் 109.40 என்ற சராசரியை வைத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும், அதிலும் 3 இரட்டைச் சதங்கள் உண்டு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.