கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 84 பேர் கைது: கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் – இலங்கை நெருக்கடி

Share

கொழும்பு ஆர்ப்பாட்டம்
படக்குறிப்பு,

கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

“இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!” “உடனடியாக பதவி விலகு!” போன்ற கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com