கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்! | One person died due to corona in Chennai

Share

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் JN.1 மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாகக் கவுழுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

Indians wearing face masks

Indians wearing face masks
AP Photo/Channi Anand

இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத நபர், கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இவர் ஜனவரி 4 அன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் சென்னையில் ஒருவர் உயிரிழந்திருப்பது, மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாதுகாப்பாக இருங்கள்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com