சீசனுக்கு ஏற்ப பழகடைகள் வெவ்வேறு நிறங்களில் ஜொலிக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.
இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகைகளும் உள்ளன. ஆனால் இந்த கொய்யாவை வைத்து கேக் செய்யலாம் தெரியுமா? அதற்கான ரெசிபியை இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.
தேவையான பொருட்கள்:
- 2½கப்/320 கிராம் மைதா மாவு
- 2½தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- ¾தேக்கரண்டி பேக்கிங் உப்பு
- ½கப்/115 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய்- அறை வெப்பநிலையில்
- 1¼கப்/250 கிராம் சர்க்கரை
- 6 பெரிய முட்டை வெள்ளை மட்டும்
- ¼கப்/60 மில்லிலிட்டர்கள் எண்ணெய்
- 1கப்/240 மில்லி பால்
- 1கப்/240 மில்லி கொய்யா விழுது அல்லது கொய்யா சிரப்
- 2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
ஃப்ரோஸ்டிங்கிற்கு:
- 1கப்/240 மில்லி ஹெவி விப்பிங் கிரீம்
- 8அவுன்ஸ்/230 கிராம் கிரீம் சீஸ் -அறை வெப்பநிலையில்
- ½கப்/100 கிராம் சர்க்கரை
- ½கப்/120 மில்லி கொய்யா சிரப்
செய்முறை:
கொய்யா சிரப்
கொய்யா சிரப் என்பது கொய்யாவை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொண்டு அதை பாதியாக குறையும் வரை கொதிக்கவைத்து குறைந்த அளவு சக்கரை சேர்த்து பயன்படுத்துவது தான். அதற்காக கடைகளில் தேடி அலைய வேண்டாம்.
கேக் செய்ய ஒரு பெரிய கிண்ணத்தில், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். அது நேரம் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை மிக்சியில் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் அடிக்கவும். அவை ஒன்றாக சேர்ந்து கொஞ்சம் அடர்த்தியாக மாறும். அப்போது முட்டையின் வெள்ளைக்கருவையும் ஒவ்வொன்றாக சேர்த்து, ஒவ்வொன்றும் சுமார் 1 நிமிடம் அடிக்கவும். இறுதியாக இந்த கலவையில் எண்ணெய் சேர்த்து மேலும் 1 நிமிடம் வரை கலக்கவும்.
இவை தயாரானதும் ஒரு தனி கிண்ணத்தில், பால், கொய்யா விழுது , தயாரித்து வைத்த கொய்யா சிரப் , வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதையும் மிஸ்யில் ஊற்றி எல்லா வற்றையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். இறுதியாக சலித்த மாவையும் இதோடு கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும்.

பின்னர் ஓவன் அல்லது குக்கரை 10 – 20 நிமிடங்கள் வரை ப்ரீ ஹீட் செய்ய வைத்து வீடாகும். அப்போது ஒரு ஆழமான பாத்திரத்தின் உள்ளே வெண்ணையைத் தடவி தயார் செய்துள்ள கலவையை அதில் கொட்டி சமன் செய்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் ஓவன் அல்லது குக்கரில் பத்திரமாக பாத்திரத்தை வைத்து விடவும்.
குக்கரில் வைக்கும் போது தீயை கொஞ்சம் குறைத்து 20 நிமிடங்கள் வரை அப்படியே மூடி விட்டு விடவும். இப்போது கொய்யா கேக் தயாராகிவிடும். அது வேகும் நேரத்தில் இந்த கேக்கின் மீது அலங்கரிக்கும் ஃப்ரோஸ்டிங் கிரீமை ரெடி செய்து விடலாம்.
பெரிய மிக்சி ஜாரில் க்ரீமை சேர்த்து மிதமான வேகத்தில் நுரை வரும் வரை 1 முதல் 2 நிமிடங்கள் வரை அடிக்கவும். வேகத்தை படிப்படியாக அதிகரிக்கவும், மேலும் 2 முதல் 3 நிமிடங்கள் வரை,அடிக்கும்போது அது லேசானதாகவும் பஞ்சுபோன்றதாகவும் மாறும். (அதிகமாக அடிக்க வேண்டாம்!)
இதையும் பாருங்க:
பின்னர் இதில் சீஸ் கலந்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை நடுத்தர வேகத்தில்வைத்து கலக்கவும். பின்னர் இந்த கலவையில் சர்க்கரை மற்றும்கொய்யா சிரப் சேர்த்து வேகத்தை அதிகப்படுத்தவும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை லேசான மற்றும் பஞ்சுபோன்ற பதம் வரும்வரை அடிக்கவும்.
பின்னர் இதை பஹிரத்திற்கு மாற்றி விடலாம். உணவு வண்ணம் சேர்ப்பதென்றால் கலவை அடித்து முடித்த பின்னர் நான்கு சொட்டுகள் சேர்த்து அதையும் 1- 2 நிமிடங்கள் கலக்கி பின்னர் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதற்குள் கேக் தயாராகிவிடும். கேக் வெந்துவிட்டதா என்று பாக்க இரு பல் குத்தும் குச்சி அல்லது சிகைக்கோரிவிட்டு பார்க்கலாம்.
ஒட்டாமல் வந்தால் கேக் தயார் என்று பொருள். கேக் குளிர்ந்த பிறகு அதன் மீது ஃப்ரோஸ்டிங் கிரீம் செய்து வைத்ததை பரப்பவும். கேக் கொஞ்சம் மிருதுவாக வேண்டும் என்று நினைத்தால் கொய்யா சிரப்பை தண்ணீரில் கலந்து கேக் இறக்கியதும் அதன் மீது ஒரு ஸ்பூன் கொண்டு ஊற்றி ஆறவைத்து விட்டு பின்னர் க்ரீம் பரப்பலாம். எல்லாம் முடிந்தபின்னர் 2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு பரிமாறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.