கொம்மு கோனாம்: ஆந்திராவில் மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மீன் – என்ன நடந்தது?

Share

கொம்மு கோனாம் மீன், ஆந்திரா, மீனவரை இழுத்துச் சென்ற கொம்மு கோனாம்

பட மூலாதாரம், UGC

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவரை மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கொம்மு கோனாம்’ என்று அழைக்கப்படும் அந்த மீன் வலையில் சிக்கியிருந்தது. வலையை மீனவர்கள் இழுக்கும் போது, அந்த மீன் மிகுந்த வேகத்துடன் வலையை இழுத்து அந்த மீனவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது, என்று கூறுகிறார் யல்லாஜி. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபருடன் சென்ற யல்லாஜி, அதனை நேரில் கண்டதாக கூறினார்.

ஜூலை 2-ம் தேதி அன்று காலை சோடுபில்லி யேரய்யா மீன்பிடிக்க சென்றார். புதிமடகா கடற்கரையில் இருந்து 25 கி.மீ கடலுக்குள் சென்று மீன் பிடித்த போது அவரை மீன் இழுத்துச் சென்றது. கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் அவரை தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

“புதன்கிழமை காலை மீன் பிடித்துவிட்டு புதிமடகா கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வலையில் கொம்மு கோனாம் என்ற மீன் சிக்கியது. அந்த மீனை தாங்கும் அளவுக்கு அந்த வலை வலுவானதாக இல்லை. எனவே யேரய்யா மற்றொரு வலையை வீசி அந்த மீனை வலைக்குள் இழுக்க முயன்றார். ஆனால் கொம்மு கோனாம் மீன் யேரய்யாவை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் யேரய்யா என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை,” என்று பிபிசியிடம் பேசிய வாசுபள்ளி யல்லாஜி விவரித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com