சத்தாக சுவையான சட்டென மதிய உணவிற்கு ஏதேனும் செய்ய நினைக்கிறீர்களா.? கொண்டை கடலையை இரவு ஊற வைத்தால் போதும். அடுத்த நாள் காலையில் சட்டென சமைத்து விடலாம். இந்த கொண்ட கடலை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. வெறும் தயிர் வெங்காயப் பச்சடி இருந்தால் போதும். பத்தாத பட்சத்தில் அவித்த முட்டை இருந்தால் ஒரு கம்ப்ளீட் மீல் ரெடி.
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – ஒரு கப்,
- தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்.
- காய்ந்த மிளகாய் – 5,
- பச்சை மிளகாய் – 2
- பெரிய வெங்காயம் – ஒன்று
- பட்டை – சிறு துண்டு
- வெந்தயம் – அரை டீஸ்பூன்
- எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்,
- வெள்ளை கொண்டைக்கடலை – கால் கப்,
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- நெய்யில் வறுத்த முந்திரி – 8.

செய்முறை:
முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைக்கவும். பின்பு தனியா, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
பின்னர் பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
பின்பு அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.