“கொஞ்சம்கூட ஃபீலிங்கே இல்லாம இருக்கா…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -132 | Sexual guidance for newly married couple

Share

தாம்பத்திய உறவில் ஒரு விஷயத்தை கணவர் விரும்பி, அதே விஷயத்தை மனைவி விரும்பவில்லை என்றால், அவர்கள் உறவில் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்யும். அதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியை பற்றி இன்றைய கட்டுரையில் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

“‘அந்த தம்பதியர் என்னை சந்திக்க வருகையில் மிகுந்த சோர்வாக இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு புதிதாக திருமணமானவர்கள் என்பதைச் சொல்லியது. யார் முதலில் பேசுவது என்கிற யோசனையுடன் அமர்ந்திருந்தவர்களிடம், ‘என்ன பிரச்னை’ என்று விசாரிக்க ஆரம்பித்தேன். இருவரும் அப்போதும் இறுக்கமாகவே இருந்தார்கள். இப்படிப்பட்டவர்களை தனித்தனியாக விசாரித்தால் மனம் விட்டுப் பேசிவிடுவார்கள் என்பதால், மனைவியை ரிசப்ஷனில் அமரச் சொல்லிவிட்டு, அந்த இளைஞரிடம் பேச ஆரம்பித்தேன்.

‘கொஞ்சம்கூட ஃபீலிங்கே இல்லாம இருக்கா டாக்டர். பொண்ணு பார்க்கப் போறப்போ என்னைப் பிடிச்சிருக்குன்னுதான் சொன்னா. இப்போ பார்த்தா பிடிக்காத மாதிரியே நடந்துக்கிறா’ என்றார். ‘கல்யாணமான கொஞ்ச நாள்லேயே உங்களைப் பிடிக்காத மாதிரி என்ன செஞ்சாங்க’ என்றேன். அது வந்து என்று இழுத்தவர், மெல்லிய குரலில் ‘ஓரல் செக்ஸுக்கு ஒத்துக்க மாட்டேங்குறா… நான் கெஞ்சிகூடப் பார்த்துட்டேன்’ என்றார். ‘நீங்க பார்ன் மூவீஸ் பார்ப்பீங்களா’ என்றேன். ‘பார்ப்பேன் டாக்டர்’ என்றார்.

தாம்பத்திய உறவில் பெண்ணுக்கு சில விருப்பு, வெறுப்புகள் உண்டு. உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிக்கும். ஓரல் செக்ஸ் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதில்லை. இது தெரியாமல், பார்ன் மூவிஸ் பார்த்துவிட்டு, அதில் வருவதைப்போல மனைவி தனக்கு செய்ய வேண்டுமென பல ஆண்கள் விரும்புகிறார்கள். அதிலும் சில ஆண்கள், மனைவியை ஓரல் செக்ஸுக்கு வற்புறுத்தவும் செய்கிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com