கைகொடுத்த மகளிர் சுய உதவிக்குழு..! மால்ட் பிஸினஸில் அசத்தும் விழுப்புரம் பெண்கள்..!

Share

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான சத்தான கேரட், பீட்ரூட், செவ்வாழை ஆகிய பிளேவர்களில் மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதன் செயல்முறை விளக்கம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற தமிழக அரசு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களின் கீழ் மகளிர் சுய உதவி குழு மூலம் அலங்கார பொருட்கள் கைவினைப் பொருட்கள் உணவு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் தனலட்சுமி கார்டன் பகுதியில் 15 பேர் கொண்ட தமிழ் மகளிர்சுய உதவிக் குழு மூலம் கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட், செவ்வாழை மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மால்ட்டுகள் செய்வது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் அசத்தும் பெண்கள்

பிரஷ்ஷான பீட்ரூட் களை தோள் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி, அதனை மிக்ஸியில் இரண்டு முறை அரைத்து பிறகு பெரியவாணலில் நாட்டு சக்கரை, முந்திரி, ஏலக்காய் போட்டு அரைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்குகிளற வேண்டும்.அதன் பிறகு நல்ல பதத்திற்கு வந்தவுடன் ஒரு டிரேயில் கொட்டிய பிறகு நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும் நன்றாக காய்ந்த பிறகு அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டால் சுவையான மால்ட் பவுடர் ரெடி. பின்னர் அதனை டப்பாவில் அடைத்து அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டி பேக் செய்கிறார்கள். இதே போன்று கேரட்,செவ்வாழை மால்ட்டும் செய்கின்றனர்.

இதையும் படிங்க : டர்கிஸ் ஐஸ்கிரீம் முதல் இத்தாலியன் உணவுகள் வரை.. திருச்சியில் ஃபேமஸாகும் கஃபே எங்க இருக்கு தெரியுமா?

இந்த மால்ட் பவுடரை பால் அல்லது சுடு தண்ணீரில் 2 ஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கலாம் என தெரிவிக்கும் குழுவினர், இந்த மால்ட் பவுடர் குடிப்பதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரித்து உடலுக்கு தேவையான சக்தியை கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மால்ட்டை குடிப்பதன் மூலம், பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை சரியாவதாகவும். உயர் ரத்தம் அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் பீட்ரூட் மால்ட்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால், தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருப்பூர், பாண்டி, வேலூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இவ்வகை மால்ட் அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ கொண்ட பீட்ரூட் மால்ட் பாக்ஸ் – 600 ரூபாய் என்றும், கேரட் மால்ட் – 600 ரூபாய் என்றும், செவ்வாழை -700 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி அரசு நிகழ்ச்சிகளிலும் ஸ்டால்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக கூறும் மகளிர்சுயஉதவிக்குழுவினர், விழுப்புரம் நகர மக்கள் இதனைப் பற்றி கூடுதல் விவரங்கள் தெரிவதற்கும் இதனை வாங்குவதற்கும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மால்ட் வகைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 7305910687 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com