கே.எல்.ராகுல் அதிரடியில் ஆர்சிபியை துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் | ஐபிஎல் 2025 | RCB vs DC highlights, IPL 2025

Share

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

சால்ட், 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது பெங்களூரு. சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அந்த அணி அதை தக்கவைத்துக் கொள்ள தவறியது. தேவ்தத் படிக்கல், கோலி, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரஜத் பட்டிதார், க்ருணல் பாண்டியா ஆகியோர் சீரான இடைவேளியில் விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட், 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார்.

அதன் மூலம் 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. டெல்லி தரப்பில் விப்ராஜ் மற்றும் குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் மோஹித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

164 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணியின் ஓப்பனிங் வீரர்களாக டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் ஆடினர். ஆனால் முதல் ஓவரில் ஒருவரும், அடுத்த ஓவரில் மற்றவருமாக உடனடியாக வெளியேறினர். அடுத்து இறங்கிய அபிஷேக் பொரெல் ஏழு ரன்களுடன் வெளியேறவே, கே.எல்.ராகுல் கடைசி வரை நின்று ஆடி 93 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 15 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்கள் என 17.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com