கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்க்கும் மீனவர்கள் – என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

Share

கேரளா வக்ஃப் வாரிய நிலப் பிரச்னை

கேரள மாநிலம் முனம்பத்தில் வக்ஃப் வாரிய நிலம் தொடர்பாக மூன்றாவது மாதமாகத் தொடரும் போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக நடக்கும் முயற்சி இது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதை போராட்டக் குழுவினரும், பாரதிய ஜனதா மாநிலத் தலைவரும் மறுத்துள்ளனர். கேரள அரசு அமைத்துள்ள ஆணையம் தரும் அறிக்கைப்படி, இதற்குத் தீர்வு காணப்படும் என்று கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் உறுதியளித்துள்ளார்.

முனம்பம் கிராமத்திலுள்ள 404 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமை யாருக்கு? இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அழகான கடற்கரை கிராமம் முனம்பம். கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில், பிரபலமான செராய் கடற்கரை அருகில் இருக்கிறது இந்தக் கிராமம். பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் வாழும் இந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவையே பிரதான வாழ்வாதாரம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com