கேரளா லாட்டரி: பரிசு வென்றும் நிம்மதி இல்லை – ஆட்டோ ஓட்டுநர்

Share

Anoop

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், பொதுமக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க வீடு மாற வேண்டியிருக்கும் என்கிறார்.

இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் கேரளா அரசு லாட்டரியில் 25 கோடி பரிசு விழுந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு அந்நியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டார்.

“நான் பரிசு பெறாமல் இருந்திருக்க விரும்புகிறேன். எனக்கு மூன்றாம் பரிசு விழுந்தால் கூட நன்றாக இருந்திருக்கலாம். மக்களின் கவனத்தில் இருந்து தப்பிக்க வீடு மாறுவது குறித்து ஆலோசித்து வருகிறேன்,” என்று காணொளியில் அனூப் கூறுகிறார்.

லாட்டரியில் பரிசு விழுந்தபோது ஊடகங்களில் அனூப் ஒரே இரவில் தலைப்புச் செய்தி ஆனார். அவர் தனது மகனின் உண்டியலை உடைத்து, ஒரு வேலைக்காக மலேசியா செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக – செப்டம்பர் 17ஆம் தேதி லாட்டரி சீட்டை வாங்கினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com