கேரளா: ஆளுயர மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற இந்த பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

Share

ஆளுயர மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற இந்த பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

பட மூலாதாரம், Sai Krishan, Thirunelly Tribal Special Intervention Programme

படக்குறிப்பு, நூராங் கிழங்குடன் லஷ்மி மற்றும் சாந்தா

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் நாட்டின் பழமையான மரவள்ளிக் கிழங்குக்கு புத்துயிரூட்ட பழங்குடியின பெண்கள் கடுமையாக முயற்சி எடுத்துவருகின்றனர்.

நிலத்திற்கு அடியில் விளையும் பெரிய, கெட்டியான மரவள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்க ஒருநாளில் பல மணிநேரங்களை செலவிடுகிறார்.

அவற்றில் சில எளிதில் பிடுங்க முடியாத அளவுக்கு 5 கிலோ எடையும் 4.5 அடி நீளமும் கொண்டவை. அதாவது, ஏறத்தாழ லஷ்மியின் உயரத்தை ஒத்தவை. மிகவும் கடுமையான பணி இது என்கிறார், 58 வயதான லஷ்மி.

முதலில் அவர் நிலத்திற்கு மேலே உள்ள தடிமனான தளிரை வெட்ட வேண்டும். பின்னர் அதை சுற்றியுள்ளவற்றை மண்வெட்டி மூலம் அகற்றி, துடுப்பு போன்று தட்டையான கருவியால் கவனமாக மரவள்ளிக் கிழங்கை வெளியே எடுக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com