கேயி ரூபத்: மெக்காவில் இந்திய விருந்தினர் மாளிகையால் 50 ஆண்டுகளாக நீடிக்கும் சர்ச்சை என்ன? பல கோடி ரூபாய் யாருக்கு?

Share

மெக்கா, இந்தியா, சௌதி அரேபியா, முஸ்லிம்கள், இஸ்லாம், கேரளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்காவின் ஆரம்ப கால புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான அப்துல் கஃபார் எடுத்த 19ஆம் நூற்றாண்டின் மஸ்ஜித் அல்-ஹராமின் புகைப்படம்

வருடாந்திர ஹஜ் யாத்திரை முடிவடையும் நேரத்தில், மெக்காவின் ஒரு பழமையான பகுதியில் இருந்து, அதன் ஆன்மிக சிறப்புக்காக அல்லாமல், 50 ஆண்டுகளாக நிலவும் ஒரு சொத்துத் தகராறுக்காக, மெக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள இந்தியாவில் ஒரு பெரும் விவாதம் எழுந்துள்ளது.

‘கேயி ரூபத்’ எனப்படும் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு விருந்தினர் மாளிகைதான் இந்த சர்ச்சையின் மையப்புள்ளி.

கடந்த 1870களில் மலபாரை சேர்ந்த (இன்றைய கேரளா) புகழ்பெற்ற பணக்கார வணிகர் மியான்குட்டி கேயி என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது. அவர் உருவாக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் மும்பையில் இருந்து பாரிஸ் வரை பரவியிருந்தது.

இஸ்லாத்தின் புனிதத் தலமான மஸ்ஜித் அல்-ஹராம் மசூதிக்கு அருகில் அமைந்திருந்த இந்த விருந்தினர் மாளிகை, மெக்கா நகரத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக 1971ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com