ஐ.பி.எல் 2025-ம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பல புது வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதிக்கும். இந்த நடைமுறையின்படி, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் எந்த அணிக்கும் செல்லமாட்டார். அவர் டெல்லி அணியிலேயே தொடர்வார் என அந்த அணி நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில்தான், ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இருக்கும் டுபிளசிஸ்க்கு வயது 40-ஐ தாண்டி விட்டது. இதனால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவது கேள்விக்குறி எனக் கூறப்படும் நிலையில், “ஆர்.சி.பி அணியின் கேப்டனாக வேண்டும் என அதன் மேலாளரிடம் ரிஷப் பண்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஆர்.சி.பி-க்கு ரிஷப் பண்ட் வருவது, சில அரசியல் காரணத்துக்காக விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. அதனால் ரிஷப் பண்ட் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்ற செய்தி வைரலானது.
இதற்கு ரிஷப் பண்ட் தன் எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிலளித்திருக்கிறார். அதில், “பொய் செய்தி… சமூக வலைதளங்களில் ஏன் பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்… புத்திசாலிதானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த காரணமும் இல்லாமல் நம்பகத்தன்மையற்ற சூழலை உருவாக்காதீர்கள்.
Fake news . Why do you guys spread so much fake news on social media. Be sensible guys so bad . Don’t create untrustworthy environment for no reason. It’s not the first time and won’t be last but I had to put this out .please always re check with your so called sources. Everyday…
— Rishabh Pant (@RishabhPant17) September 26, 2024

இது போன்ற போய் செய்திகள் வெளிவருவது முதல் முறையும் அல்ல… இது தான் கடைசி பொய் செய்தியும் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், இந்தப் பொய் செய்திக்கு பதிலளித்திருக்கிறேன். தயவு செய்து உங்களின் so called sources-ஐ சரிபாருங்கள். ஒவ்வொரு நாளும் அது மோசமாகிக்கொண்டே செல்கிறது. கொஞ்சம் ஓய்வெடுங்களேன்… இந்த செய்தி உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைப் போன்று பொய் செய்திகளைப் பரப்பும் அனைவருக்கும்தான்…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.