அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது.

மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஆண் புலி நடமாட்டம் இல்லாத வாழிட எல்லையைக் கண்டறிந்து அந்த பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளோம். இந்த இளம் ஆண் புலி தனக்கான எல்லையை வகுத்துக் கொள்வதுடன் அதற்குத் தேவையான இரை, இணை, நீர்நிலைகள் போன்றவையும் ஏற்படுத்திக்கொள்ள ஏதுவான வாய்ப்புகள் உள்ளன