கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் – Dinakaran

Share

மஞ்சூர்: கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் மேற்கொள்கிறார். அகில  இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைத்தார். தற்போது கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகிறார். இது குறித்து நீ மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்  ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கூடலூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து 6.5 கிமீ தூரம் நடைபயணமாக செல்லும் ராகுல்காந்தி இன்று மாலை மத்திய பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com