வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ் (momos). தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது என பல வகைகளில் கிடைக்கிறது. மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.
எப்போது வெளியில் சென்றாலும், பானிப்பூரி மற்றும் மோமோஸ் சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை. சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் ஐ வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாவு தயார் செய்ய…
மைதா – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி.
பில்லிங் செய்ய…
சிக்கன் கீமா – 300 கிராம்.
வால்நட் – 1/4 கப்.
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது.
பூண்டு – 3 பற்கள் நறுக்கியது.
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது.
வெங்காயத்தாள் வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது.
வெங்காயத்தாள் கீரை – 1/4 கப்.
உப்பு – 1/2 ஸ்பூன்.
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்.
சோயா சாஸ் – 2 ஸ்பூன்.

செய்முறை :
முதலில், மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்பு தண்ணீர் ஊற்றி பரோட்டா மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
இப்போது, கடாயில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து தனியே வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில், பாத்திரத்தில் நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்கவும்.
Also Read | காரசாரமான பனீர் மஞ்சூரியன் செய்யலாமா..? இதோ ரெசிபி..!
இதை தொடர்ந்து, சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போல மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.
மாவின் நடுவில் சிக்கன் சேர்மத்தை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும்.
இதை தொடர்ந்து, மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோஸை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான சிக்கன் மோமோஸ் தயார்.
குறிப்பு : ஸ்டீமர் இல்லையெனில், இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.