அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர்.
முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால்… கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர்.
இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலின் வாசலின் முன்பு அமர்ந்து நள்ளிரவு வரையில் சுமார் 4 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதினால், சிதம்பரம் நடராஜர் கோயில் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும், இந்த ஒரு வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமே, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 வழக்குகள் தீட்சிதர்கள் தரப்பிலானது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.