இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் (Jandre Opperman) குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. “முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர்… பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது… குழந்தை சுவாசிக்க வேண்டாமா… அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் குழந்தையின் மாஸ்க்கை எடுத்து வீசி இருப்பேன்…” எனப் பல எதிர்மறையான கமென்ட்டுகள் குவிய ஆரம்பித்தன.
இவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, `மாஸ்க் மிகவும் இறுக்கமாக இல்லை, அதோடு குழந்தை நலமாக இருக்கிறதா என்பதில் குழந்தையின் அம்மா கவனமாக இருந்தார்’ என ஒப்பர்மேன் தெரிவித்துள்ளார்.