குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. வெஜ் லாலிபாப் செய்யும் ரெசிபி!

Share

குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. பன்னீரை வைத்து ஒரு சூப்பரான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி என பார்க்கலாம். இதோ, உங்களுக்கான ரெசிபி…

தேவையான பொருட்கள் :

வேகவைத்த உருளைக்கிழங்கு – 3.

கேரட் – 1 நறுக்கியது.

குடைமிளகாய் – 2 நறுக்கியது.

வெங்காயம் – 2 நறுக்கியது.

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது.

பன்னீர் – 50 கிராம் துருவியது.

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

கொத்தமல்லி இலை நறுக்கியது – சிறிது.

பிரட் தூள் – ½ கப்.

மிளகு தூள் – 4 ஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

எண்ணெய் – தேவையான அளவு.

பூண்டு – 1 ஸ்பூன். நறுக்கியது

இஞ்சி – 1 ஸ்பூன். நறுக்கியது

சில்லி சாஸ் – 1 ஸ்பூன்.

சோயா சாஸ் – 1 ஸ்பூன்.

டொமட்டோ கெட்சப் – 3 ஸ்பூன்.

வினிகர் – 1 ஸ்பூன்.

சோளமாவு – கால் கப்.

செய்முறை :

முதலில், எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி நன்கு மசித்து எடுத்து வைக்கவும்.

பின்பு அதில் நறுக்கிய கேரட், குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் துருவிய பன்னீர் சேர்க்கவும்.

பிறகு மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து பின்பு அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து மசாலாவை நீள் வட்ட வடிவில் உருட்டி அதில் ஐஸ் குச்சி அல்லது வேகவைக்காத உருளைகிழங்கை நீள வாக்கில் வெட்டி அதில் குத்தி வைக்கவும்.

Also Read | ஜவ்வரிசியை வைத்து ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாமா..? இதோ ரெசிபி..!

இப்போது, சோள மாவு கலவை செய்ய, சோளமாவு, மைதா, உப்பு, மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

பின்பு லாலிபாப்பை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் உருட்டி தனியாக எடுத்துவைக்கவும்.

இதையடுத்து, சாஸ் செய்ய முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு சில்லி சாஸ், சோயா சாஸ், டொமட்டோ கெட்சப், வினிகர், தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு சோளமாவு கலவையை ஊற்றி கலந்து பின்பு மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் லாலிபாப்பை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வெஜ் லாலிபாப் தயார்!

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com