குழந்தைகளுக்கு பிடித்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

Share

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போருக்கு இந்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கொழுக்கட்டை செய்வதற்கு

  • இடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) – 3 கப்
  • தண்ணீர் – 5 கப்
  • உப்பு- 1 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்

தாளிக்க:

  • இட்லி பொடி (எள்ளு பொடி இருந்தால் சிறப்பு)
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை :

முதலில் மாவு பிசைவதற்கு தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடுங்கள்.

கொதித்த பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கிளறிக்கொள்ளுங்கள்.

மிதமான சூட்டிற்கு வந்த பின் கையால் நன்றாக அழுத்தம் கொடுத்து மிகவும் தண்ணீராக இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது தளதள வெண இருக்குமாறு பிசைந்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர் கொழுக்கட்டை செய்ய வட்ட வடிவம் சரியாக வருகிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அதனை ஒரு ஒரு ஈர துணியால் மூடி சிறிது நேரம் ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர் மாவை சிறிது சிறிது உருண்டையாக பிடித்து இட்லி தட்டில் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சீரம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் அதில் வேக வைத்த கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து கிளறிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதில் விருப்பப்பட்ட இட்லி பொடியை சேர்த்து கிளறினால் கார அம்மிணி கொழுக்கட்டை தயார்.

First published:

Tags: Kara Kolukattai Recipe in Tamil, Kolukattai Recipe in Tamil, Vinayagar Chathurthi

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com