குழந்தைகளுக்கு பிடித்த ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா?

Share

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பெரிய கவலை நாளை என்ன சமையல் செய்வது. குழந்தைகளுக்கு பிடித்த அல்லது ஆரோக்கியமாக எப்படி சமைப்பது என்பது பெரிய தலைவலி. இந்நிலையில், நாங்கள் ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி பற்றி கூறுகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பூண்டு சாதம் ஒன்றினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

பூண்டு – 2.

வடித்த சாதம் – 2 கப்.

வெங்காயம் – 2.

சோயா சாஸ் – 1 ஸ்பூன்.

கடுகு – 1/2 ஸ்பூன்.

மிளகு தூள் – 1/2 ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் – 2.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் சூப்பரான பூண்டு சாதம் ரெடி!

செய்முறை :

பூண்டு சாதம் செய்வதற்கு முன்னதாக, இரண்டு கப் அளவிற்கு வடித்த வெள்ளை சாதத்தினை ஒரு கோப்பையில் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து, வெங்காயம் ஒன்றினை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதேநேரம் 2 பூண்டினை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து இடித்து வைத்துக்கொள்ளவும்.

தற்போது பூண்டு சாதம் செய்ய, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் கடுகு மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

Also Read | இனி முள்ளங்கியை இப்படி செய்யுங்க… எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

தொடர்ந்து இதில் காயந்த மிளகாயினை காம்பு நீக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்து வைத்த பூண்டு மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

இறுதியாக இதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து, நன்கு வேக வைக்கவும். இந்த சேர்மத்தில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

சேர்மம் நன்கு வதங்கியதும் இதில் வடித்து வைத்த வெள்ளை சாதம் சேர்த்து கிளறி விட சுவையான பூண்டு சாதம் ரெடி.

சுவையான இந்த பூண்டு சாதத்தினை அப்படியே ஒரு தட்டில் வைத்து பரிமாறலாம். கூடுதலாக பூண்டு அல்லது தக்காளி ஊறுகாய் சேர்த்து பரிமாற சாதத்தின் சுவை கூடும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com