குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஒமிக்ரான் XBB.1.16 – இந்திய ஆய்வு சொல்வதென்ன? | Omicron subvariant XBB.1.16 may be effect babies eyes

Share

ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸ், குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாக, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம் நாட்டில் சமீப நாள்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவிட் பரிசோதனைகளை அதிகரித்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸானது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் தொடர்பான நோய்த் தொற்றுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முதல், 16-ம் தேதி வரை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவில் இருந்த 25 குழந்தைகளை உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் வசிஷ்டா ஆய்வு செய்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com