கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும்.
பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் இந்த ஜில் சீசனில் தவிர்த்து விடுங்கள். அதற்குப்பதில், சத்துமாவுடன் வெல்லம், சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து கஞ்சியாக காய்ச்சிக் கொடுங்கள்.
இரவில் மோர் மற்றும் கீரைப் போலவே, தயிரையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ‘இரவில் தயிர் சாப்பிட்டு என் பிள்ளைக்கு பழக்கம்’ என்பவர்கள், உங்களுக்கே தெரியாமல் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறு, சைனஸ் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சைவத்தில் தூதுவளை சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு ரசம் , கொள்ளு சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.
அசைவத்தில் நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், நண்டு போன்றவை சாப்பிடலாம். இறால், உடலுக்கு மந்தம் தரக்கூடிய அசைவ உணவு என்றாலும் தசைக்கு வலிமை தரக்கூடியது, மீன் உணவுகளும் ஓகே தான். ஆனால், குளிர்காலத்தில் அசைவ உணவுகளை பகலில் மட்டும்தான் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். சாப்பிட வேண்டியவற்றில் நான் சொல்லியிருக்கிற உணவுகள் எல்லாம் குளிர்காலத்தில் குழந்தைகளின் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து, சளிப் பிரச்னை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளும்.