குல்சா, மசூர்தால் புலாவ், மலாய் கறி… ரிச் அண்ட் டேஸ்ட்டி வீக் எண்ட் ஸ்பெஷல் விருந்து!

Share

குல்சா

தேவையானவை:

மைதா – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்
ஈஸ்ட் – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்
ராஜ்மா – ஒரு கப்
தக்காளி, வெங்காயம் – தலா 2
சீரகம், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய், பால் – தேவையான அளவு
பச்சைமிளகாய், இஞ்சி,
கொத்தமல்லித்தழை,
எலுமிச்சைச்சாறு – அலங்கரிக்க.

குல்சா

செய்முறை:

ஈஸ்டை பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும். மைதாவுடன் சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்துப் பிசையவும். இதுவே பேஸ். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.

பேஸ்-இல் இருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிது கனமான ரொட்டியாக தட்டவும். தவாவில் ரொட்டியை போட்டு எண்ணெய்விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் ரொட்டியை திருப்பிப் போட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். சூடான குல்சாவின் மேல் ராஜ்மாவைப் பரப்பி அதன்மேல் மிக பொடியாக வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கொண்டு தூவி அலங்கரித்துப் பாரிமாறவும்.

மசூர்தால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – ஒரு கப்
மசூர் பருப்பு – அரை கப்
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
பச்சைப்பட்டாணி, கேரட்,
பீன்ஸ் கலவை – ஒரு கப்
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை – தலா 2
இஞ்சி-பூண்டு விழுது, சீரகம்,
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – இரண்டரை கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

மசூர்டால் புலாவ்

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா, மஞ்சள்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், பருப்பு, அரிசி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

இதில் சூடான நீர் இரண்டரை கப் விட்டு, மிதமான தீயில் மூடி வேகவிடவும். முந்திரியை வறுத்துத் தூவவும். கொத்தமல்லித்தழைத் தூவி ரைத்தாவுடன் பரிமாறவும்.

கேஷு தம் புலாவ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
பிரிஞ்சி இலை – 2
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
பனீர் – 50 கிராம்
வெள்ளித்தாள் – தேவையான அளவு
முந்திரி – 20
சர்க்கரை – சிறிது
உப்பு, மஞ்சள்தூள் -தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் – 2
புதினா இலைகள்- 10
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – சிட்டிகை
கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ – தலா சிறிதளவு

கேஷு தம் புலாவ்

செய்முறை:

பனீரை சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கவும். உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு தேய்த்து அழுத்திப் பிசறி, சிறுசிறு கோலிகளாக உருட்டி, வெள்ளித்தாளில் சுற்றிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைக்கவும். பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும். மீதி உள்ள நெய், எண்ணெய்விட்டு, சீரகம், பட்டை (உடைத்தது), பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்கும் வரை வறுத்து, பின் அரைத்த விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சாதத்தைச் சேர்த்து உடையாமல் கலக்கவும். பனீரை புலாவில் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும்.

மக்னா மலாய் கறி

தேவையானவை:

தாமரைவிதை பதப்படுத்தியது –
(மக்னா) 200 கிராம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
வெங்காயம், தக்காளி – தலா 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கசூரி மேத்தி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், வெண்ணெய், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
பச்சை மிளகாய் – 2
சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு

மக்னா மலாய் கறி

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி அரைக்கவும். முந்திரியை விழுதாக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். உப்பு, முந்திரி விழுது, பச்சைப் பட்டாணி, சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். கால் கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும், ஃப்ரெஷ் க்ரீம், கசூரி மேத்தி சேர்த்து இறக்கி வைக்கவும். பின் வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் மக்னாவை வறுத்து கிரேவியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com